தோகைமலையில் வாகன சோதனையில் ரூ.59 ஆயிரம் பறிமுதல்

குளித்தலை ஏப். 9: தோகைமலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ரூ.59 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக்குழு தோகைமலையில் வாகன சோதனை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ரூ. 59,800 இருந்தது.

ஆனால் அந்தத் தொகைகளுக்கு ஆவணம் எதுவும் இல்லை. எனவே நிலையான கண்காணிப்புக்குழுவினர் பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவில் ஒப்படைத்தார்.  பணம் அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: