புகழூர் பகுதியில் பூத்சிலிப் வழங்கும் பணி துவக்கம்

வேலாயுதம்பாளையம், ஏப். 13: தமிழகம் முழுவதும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி புகழூர் தாலுகா புகழூர் நகராட்சி கந்தம்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்பட்டது.

இதில் புகழூர் தாசில்தார் முருகன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கி வருகின்றனர். வாக்காளர் தகவல் சீட்டில் தனது பெயர், முகவரி சரியானதாக உள்ளதா? என பார்த்து வருகின்றனர். இந்த வாக்காளர் தகவல் சீட் மூலம் வாக்களிக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். இந்த வாக்காளர் சீட்டில் உள்ள பெயர், வீட்டின் முகவரி சரியானதாக உள்ளதா என்பதை காண முடியும் என்று தெரிவித்தார்.

 

Related Stories: