தோகைமலை, ஏப். 8: கரூர் மாவட்டம் தமிழ்நாட்டில் வருகின்ற 23ம் தேதி 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மாவட்டதேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் உத்தரவின்பேரில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளில் 24 மணிநேரம் வாகனத்தனிக்கை செய்வதற்கு பல்வேறு குழுக்கள் கொண்ட பறக்கும்படைஅதிகாரிள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அய்யர்மலை அருகே பணிக்கம்பட்டி நான்குரோட்டில் பறக்கும்படை அதிகாரி முத்துக்குமார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சக்கரவாகனத்தை ஆய்வு செய்தார். அதில் அபினேஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 லட்சம் கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறக்கும்படை அதிகாரி முத்துக்குமார், பணத்தை பறிமுதல் செய்து குளித்தலை தேர்தல் அதிகாரி சுவாதி யிடம் ஒப்படைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
