கிருஷ்ணராயபுரம், ஏப். 12: கிருஷ்ணராயபுரம்(தனி) சட்டமன்றத் தொகுதியின் அச்சிடப்பட்ட தபால் வாக்கு சீட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. கரூர் மாவட் டம் கிருஷ்ணராயபுரம்(தனி) சட்டமன்ற தொகுதியின் அச்சிடப்பட்ட அஞ்சல் வாக்கு சீட்டு பெறப்பட்டு கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
