கரூர் பகுதியில் வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்

கரூர், ஏப். 10: கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர், வாங்கல் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்துாரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், முறையான ஆணவங்கள் இன்றி லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 790 ஐ குழுவினர் கைப்பற்றி கரூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தாசில்தரார் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த தொகை கரூர் சார்நிலை கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: