கிருஷ்ணராயபுரத்தில் வாகன சோதனையில் ரூ.1,13,000 பறிமுதல்

கிருஷ்ணராயபுரம், ஏப். 9: கிருஷ்ணராயபுரத்தில் வாகன சோதனையில் ரூ.1,13,000 பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணராயபுரம் 136 தனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் 136 (தனி) சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று வெள்ளியணை பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்பொழுது கரூர் அருகே சணப்பிரட்டி கிராமம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1,13,000 கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அதிகாரிகள் தேர்தல்விதிமுறைகளின்படி பணத்தை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணராயபுரம்-136 (தனி) சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் பறிமுதல் செய்த பணம் ஒப்படைக்கப்பட்டது. அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (தாசில்தார்) மதியழகன் இருந்தனர்.

 

Related Stories: