கரூர், ஏப்.11: கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் அதிகளவு மல்லிகை பூ விளைவிக்கப்பட்டு, கரூர் மாநகர பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் மல்லிகை பூக்கள் விளைவிக்கப்பட்டு கரூர் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செயப்பட்டு வருகிறது. பனிக்காலங்களில் மல்லிகை பூக்கள் விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும்.
கோடை காலத்தில் அதிகளவு இந்த வகை பூக்கள் விற்பனை செய்யப்படும். அதன்படி, கடந்த சில வாரங்களாக கரு்ர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் மல்லிகைப்பூக்கள் அதிகளவு கரு்ா மார்க்கெட்டுக்கு வந்து விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகளும் அதனை அதிகளவு வாங்கி விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் இதன் தேவை அதிகம் என்பதால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
