தோகைமலை பகுதியில் 24 மணிநேரமும் தீவிர வாகன தணிக்கை

தோகைமலை, ஏப். 8: தோகைமலை வட்டார பகுதிகளில் 3 பரிவுகளாக 24 மணிநேரமும் வாகனத்தணிக்கை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றபொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கரூர்மாவட்டதேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் உத்தரவின் பேரில் குளித்தலைசட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளில் 24 மணிநேரமும் வாகனத்தனிக்கை செய்து வருகின்றனர். இதில் போலீசாருடன் இணைந்து பல்வேறு குழுக்கள் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பேரில் தோகைமலை வட்டார பகுதிகளில் முக்கியசாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் 3 பிரிவுகளாக 24 மணிநேரமும் வாகனத் தனிக்கை பணிகளை கண்கானித்துவருகின்றனர். இதில் 4 சக்கரவாகனங்கள், சந்தேகிக்கும் வகையில் வருகின்ற கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட ரூ. 50 ஆயிரத்துக்கும் கூடுதலாக பணம் கொண்டுவரப்படுகிறதா? அல்லது பரிசுபொருட்கள் கொண்டு வரப்படுகிறா? என்று ஒவ்வொரு வாகனமாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

திருச்சி-பாளையம் மற்றும் மணப்பாறை-குளித்தலை ஆகிய முக்கியசாலைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக வாகன தணிக்கை செய்கின்றனர். இதேபோல் தோகைமலையில் திருச்சி பிரிவுரோடு, சின்னரெட்டியபட்டி மற்றும் ஆர்.டி.மலைபகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டுகளில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் தோகைமலை எஸ்ஐ பாலசுப்பிரமணியன் உள்பட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நள்ளிரவில் சிறப்புகவனம் செலுத்தும் போலீசார் தீவிரமாக ககண்காணித்துவருகின்றனர். பரிசோதனைசெய்யும் போது உரியஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் பறிமுதல் செய்து பறக்கும்படைஅதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது கட்சிசார்ந்த விளம்பர ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்கின்றனர். இதில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடிகளோ! டிக்கர்களோ! 4 சக்கர வாகனங்களில் பொருத்தியிருந்தால் அதனை அகற்றி வருகின்றனர். இதனால் தோகைமலை வட்டார பகுதிகளில் 3 பரிவுகளாக 24 மணிநேரமும் வாகனத் தணிக்கை செய்து வருவதால் சுபநிகழ்ச்சி செய்யும் நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பொருட்களாகவோ, ரொக்கமாகவோ கொண்டு செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

Related Stories: