கரூர் பங்குகளில் இனி நோ ஹெல்மெட் – நோ பெட்ரோல்

கரூர், ஏப். 12: பெட்ரோல் பங்குகளில் அதிநவீன சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட எஸ்பி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் தலைமை வகித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம், அனைவரும் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், பெட்ரோல் பங்கிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களிடம் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அதாவது No Helmet – No Petrol என்பதை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்க்குகளில் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் அனைத்து போலீசார்களும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: