ஆட்டோவில் கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது

வந்தவாசி, பிப்.27: வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வந்தவாசி விளாங்காடு நெடுஞ்சாலை இரும்பேடு கூட்டுச்சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கிச்சென்ற ஒரு ஆட்டோவை மடக்கி பரிசோதனை செய்ததில் ஆட்டோவில் கத்தி, ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. ஆட்டோவில் வந்த 5 வாலிபர்களும் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் வந்தவாசி அடுத்த விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரி(28), வந்தவாசி டவுன் சன்னதி தெருவை சேர்ந்த ஸ்ரீநாத் (22),
சளுக்கை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(24), இந்திரா நகரை சேர்ந்த மோகன் (22), காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தை சேர்ந்த குமரன் (19) என தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: