பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் ெபற்றோர் முற்றுகை செங்கம் அருகே

செங்கம், பிப்.24: செங்கம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி ெபற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அறிவியல் பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். ஆனால் அதற்குள் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து தலைமறைவானதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: