பச்சிளம்குழந்தை மூச்சுத்திணறி பலி வந்தவாசி அருகே தாய்ப்பால் குடித்த

வந்தவாசி, பிப்.28: வந்தவாசி அருகே பச்சிளங்குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சு திணறி பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மாதனூரை சேர்ந்தவர் வினோத் (30). இவருக்கும் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3வது முறையாக கர்ப்பமடைந்த அனிதாவுக்கு, கடந்த 20 நாட்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது தாய் வீட்டில் ஓய்வெடுக்க வந்த அனிதா, நேற்று குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, உடனடியாக குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததா? அல்லது வேறுகாரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: