கள் இறக்கிய இருவர் கைது செங்கம் அருகே

செங்கம், பிப்.20: செங்கம் அருகே கள் இறக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் அன்னந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாரியப்பன்(40), அர்ஜூனன்(35). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பதாக பாச்சல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னந்தல் கிராம பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்பன் மற்றும் அர்ஜூனன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் கள் இறக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து எஸ்எஸ்ஐ முருகன் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories: