வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் 11 செல்போன்கள் பறிமுதல் போலீசார் விசாரணை செய்யாறு முகாமிற்கு அழைத்து வரப்பட்ட

ெசய்யாறு, பிப்.26: செய்யாறு சிறப்பு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த 8 பேரிடம் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வெளிநாட்டவர்கள் யாரேனும் குற்றவழக்கில் சிக்கினால் போலீசில் ஒப்படைத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது சிறிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டவர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டை சேர்ந்த மேலும் 8 பேர், செய்யாறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். அப்போது அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது ஒரு பையில் 11 செல்போன்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து போலீசார் அந்த செல்போன்களை பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து செய்யாறு விஏஓ தங்கராசு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: