மதுரை, பிப். 25: மதுரை – தேனி சாலையில் மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுடன், உள்ளூர் வாகனங்களும் ஒரே நேரத்தில் செல்வதால், முடக்குச் சாலை சந்திப்பு துவங்கி அச்சம்பத்து வரையிலான 2 கி.மீ தூரத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில், ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சக விதிப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க அனுமதி கிடையாது என்பதால், மதுரை – தேனி சாலையில் எங்களால் அப்பணிகளை மேற்கொள்ள முடியாது.
அதேநேரம், சம்பந்தபட்ட சாலையில் காவல்துறை தரப்பில் தற்காலிக வேகத்தடைகள் அமைக்கலாம். இதற்கு எங்கள் அனுமதி தேவையில்லை’’ என்றனர். எனவே இந்த சாலையில் மேம்பாலத்தின் இரு திசைகளிலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க வசதியாக, வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
