சாத்தூர், பிப்.16: சாத்தூர் பேருந்து நிலையத்தில், அதிகாலையில் போதியளவு பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தின் உள்ள பெரும்பாலான கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வங்களை வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் முதல் வெளியூரில் இருப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக தங்கள் கிராமங்களுக்கு குடும்பத்துடன் வந்தனர்.
நேற்று அதிகாலை முதல் 6 மணி வரைக்கும் சிவகாசி, விருதுநகர், தாயில்பட்டி, இருக்கன்குடி பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகள் போதியளவு இல்லாததால் சாத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் வெகுநேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர். இதனால் முதியவர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பயணிகள் கூறுகையில், இது போன்ற விசேஷ நாட்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
