கயத்தாறு, பிப். 11: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா, கயத்தாறில் நடைபெற்றது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். கடம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, 150 கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். மேலும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் கற்பகவல்லி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, மாவட்ட அயலக அணி தலைவர் இஸ்மாயில், துணை அமைப்பாளர் செல்வக்குமார், கடம்பூர் பேரூர் செயலாளர் பாலகுமார், கயத்தாறு பேரூர் துணைச் செயலாளர் குருசாமி, வார்டு கவுன்சிலர் நயினார், கிழக்கு ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்தன மாரியம்மாள், முன்னாள் கவுன்சிலர் ஷேக் தாவூத் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கயத்தாறில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
- காயாதர்
- சமூக நலன்புரி மற்றும் பெண்கள் உரிமைகள் திணைக்களம்
- திமுக கிழக்கு ஒன்றியம்
- சின்னபாண்டியன்
- முன்னாள்
- கடம்பூர்
- நகரம்
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- நாகராஜா…
