கடலூர், பிப். 13: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் வீடற்றோர் தங்கும் இல்லத்தில் முதுநகர் கிஞ்சம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜசேகர்(70) என்பவர் தங்கி இருந்தார். சம்பவத்தன்று இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்குமாறு தனியார் விடுதி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அறித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
