பெரணமல்லூர், பிப்.13: பெரணமல்லூர் ஒன்றியத்தில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். பெரணமல்லூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசம்பட்டு, ஜெகநாதபுரம், ரகுநாத சமுத்திரம், தவணி, செட்டாங்குளம், அல்லியந்தல், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம், சிமெண்ட் சாலை பணி, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பணி, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாடு திட்ட பணிகள் மற்றும் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்ட பணிகள், கணினி வகுப்பறைகள், பள்ளி கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம் உள்ளிட்ட ரூ.3 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளங்கோ, திட்டப்பணிகளை ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டுன் என தெரிவித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் கலாநிதி, ஒன்றிய பொறியாளர்கள் புஷ்பா, புருஷோத்தமன், ஊராட்சி செயலாளர் சாந்தமூர்த்தி, பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ரூ.3 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செயற்பொறியாளர் ஆய்வு பெரணமல்லூர் ஒன்றியத்தில்
- பெரணமல்லூர் யூனியன்
- பெரணமல்லூர்
- நிர்வாக பொறியாளர்
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
- தமிழ்நாடு அரசு
- அரசம்பட்டு
