திருக்கோவிலூர், பிப். 13: திருக்கோவிலூர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் கன்னிமார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(70)என்பவர் கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு பின்னர் மாலை 6 மணி அளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்க்கும்போது கோயில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உள்ளே வைத்திருந்த உண்டியலை காணவில்லை. இது குறித்து கண்ணன், திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
