மதுரையில் ரூ.9.5 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்

 

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.9.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த பயணியிடம் இருந்து 9 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து மதுரை வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பயணியின் பையை சோதனையிட்டபோது சாக்லேட் பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த கஞ்சா சிக்கியது

Related Stories: