மாணவி கொலை வழக்கில் மும்பையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

பாலக்காடு : கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குதிரவட்டம் பகுதியில் மாணவியை கொன்ற வழக்கில் கைதாகி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற வாலிபரை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அடுத்த நருக்கராவை சேர்ந்தவர் வினீஷ் வினோத் (26) இவர் ஆட்டோ டிரைவர். மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா அடுத்த எலம்குளம் பகுதியை சேர்ந்த திரிஷியா (21) என்ற மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இவரது காதலுக்கு திரிஷியாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வினீஷ் வினோத் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி திரிஷியாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி புகுந்து திரிஷியாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசா வழக்குப்பதிவு செய்து வினீஷ் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கு அவர் பலமுறை தற்கொலைக்கு முயற்சியில் ஈடுப்பட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் கோழிக்கோடு அருகேயுள்ள குதிரவட்டம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் காப்பகத்திலிருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். தொடர்ந்து, மும்பை போலீசார் உதவியுடன் அங்கு பதுங்கி இருந்த வினீஷ் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: