மகனை கட்டையால் அடித்து கொன்ற அதிமுக மாஜி பஞ்.தலைவர் கைது: பிறந்த நாளன்று இறந்த சோகம்

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் மரியராஜ் (61). அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மனைவி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 4 பிள்ளைகள் உள்ளனர். திருமணமாகாத 3வது மகன் யேசுதாஸ் (29) என்பவருடன் மரியராஜ் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு போதையில் இருந்த மரியராஜ், அவரது மகன் யேசுதாசுடன் தகராறில் ஈடுபட்டார்.

இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மரியராஜ், அருகில் கிடந்த கட்டையை எடுத்து மகன் யேசுதாசின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த யேசுதாஸ் மயங்கி விழுந்தார். பின்னர் மரியராஜ் தூங்க சென்றார். நேற்று காலை மரியராஜ் எழுந்து பார்த்தபோது யேசுதாஸ் அசைவின்றி கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது கட்டையால் தாக்கியதில் மகன் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணப்பாறை காவல் நிலையத்தில் மரியராஜ் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யேசுதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சரணடைந்த மரியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரியராஜ் 2008 -2013ல் வடுகப்பட்டி பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட யேசுதாசுக்கு நேற்று (10ம்தேதி) பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: