நெல்லை: கஞ்சா வழக்கில் மதிமுக செய்தித் தொடர்பாளர் மகன் கைது செய்யப்பட்டார். மதிமுக செய்தித் தொடர்பாளராக இருப்பவர் மின்னல் முகமது அலி. இவரது மகன், முகமது நௌபல் சாலிக் (18). நெல்லை சுத்தமல்லியில் உள்ள கருங்காடு விலக்கில் போலீசார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் மின்னல் முகமது அலியின் மகன் வந்துள்ளார். போலீசார் அந்த பைக்கை மடக்கி சோதனையிட்டனர்.
அப்போது பைக் டிக்கியில் மறைத்து வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்யவே கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மின்னல் முகமது அலியின் மகன் முகமது நௌபல் சாலிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சேரன்மாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
