பாஜ அமைச்சருக்கு கள்ள ஓட்டு: வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜ, காங்கிரஸ் நேருக்கு நேர் மோதியது. பாஜ சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் களமிறங்கினார். இத்தொகுதிக்கான மண்ணாடிப்பட்டு ஜவகர்லால் நேரு சமுதாய நலக்கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரு வாலிபர் பாஜவினருக்கு கள்ள ஓட்டு போட்டுள்ளார். அவரை பிடித்து காங்கிரசார் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் தொரவியை சேர்ந்த அரவிந்த் (31) என்பது தெரியவந்தது. ஒரு கட்சிக்கு பணம் வாங்கி கொண்டு ஆள் மாறாட்டம் செய்து அவர் வாக்கு செலுத்தியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அரவிந்தன் மீது வழக்குபதிந்து கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: