பல ஆண்களுடன் தொடர்பால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

 

 

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புதுவேட்டக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி நந்தினி(28). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பெரியசாமி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நந்தினி பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஒரு மாதமாக பெரம்பலூர் பாரதிதாசன் நகர் 4வது குறுக்குதெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது குழந்தைகளை மாமியார் கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று நந்தினி வீட்டில் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்து விட்டதாக புதுவேட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த பச்சமுத்து(33) என்பவர் பெரம்பலூர் டவுன் போலீசுக்கு போன் செய்து கூறிவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பச்சமுத்துவை தேடிக் கண்டுபிடித்து கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்: நந்தினியின் கணவர் இறந்த பின்பு என்னுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருக்க நந்தினியை வாடகை வீட்டில் குடி வைத்தேன்.

இந்நிலையில் நந்தினி வேறு சில ஆண்களுடன் செல்போனில் தொடர்பில் இருந்ததுடன் அவர்களுடன் அடிக்கடி பேசி வந்தார். இதை கண்டித்தேன். நேற்று முன்தினம் இரவு நாங்கள் தனிமையில் இருந்தபோது பல ஆண்களுடன் பேசுவதை விடும்படி திட்டினேன். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். சில மணிநேரம் அவரது சடலத்துடன் இருந்த நான் அதிகாலை போலீசுக்கு போன் செய்து கூறிவிட்டு சென்று விட்டேன் என கூறியுள்ளார்.

பச்சமுத்துவுக்கு நந்தினியுடன் உள்ள கள்ளத்தொடர்பு தெரிந்ததும் அவரது மனைவி சத்யா கணவரை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளத் தொடர்பை கைவிடாததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நந்தினி கொலை செய்யப்பட்டதால் அவரது 3 குழந்தைகளும், பச்சமுத்துவும் கைதாகி விட்டதால் அவரது 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கின்றனர்.

Related Stories: