குளத்தூர், பிப். 10: தருவைகுளம் புனித நிக்கொலாசியார் ஆலய திருவிழா 10ம் நாளில் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தருவைகுளம் புனித நிக்கொலாசியார் ஆலய திருவிழா, கடந்த 30ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில்10 நாட்களும் காலை, மாலையில் பங்குத்தந்தைகள் ராஜன், அந்தோணிபாக்கியம், வசந்தன், சந்தீஸ்டன், ஜெயந்தன், அமலன், வினித்ராஜா, ஆலிபன், ரோஷன், ராபின், மரியதாஸ், மரியஅரசு, பிரவீன், லாரன்ஸ், ஞானம், ஸ்டார்லின், சவரி, டோம்னிக், ராபின், சஜன் ஆகியோர் மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
நேற்று முன்தினம் 10ம் திருநாளான்று காலை பங்குத்தந்தை சகாயஜோசப் தலைமையில் பங்குத்தந்தை பிரடின் முன்னிலையில் தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மறையுரை ஆற்றினார். இதையடுத்து சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது. தொடர்ந்து தருவைகுளம் முக்கிய வீதிகள் வழியாக புனித நிக்கொலாசியார் சொரூபத்துடன் சப்பர பவனி நடந்தது. நேற்று காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட், ஆலய கட்டளைக்காரர்கள் செய்திருந்தனர்.
