சேங்காலிபுரம் கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம்

வலங்கைமான், ஜன.30: குடவாசல் வட்டாரம் சேங்காலிபுரம் கிராமத்தில் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர்.

கிராமத்தின் வரைபடம் , பிரச்சனை மரம், கால அட்டவணை மற்றும் பயிர்கள், மக்கள் தொகை விகிதம், ஊராட்சியின் பரப்பளவு, விவசாயிகள் வகைப்பாடு போன்றவற்றை வரைபடங்களாக மாணவர்கள் வரைந்திருந்தனர். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர் மற்றும் வேளாண்மை சார்ந்த செய்திகளை மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

 

 

Related Stories: