புதிய நிர்வாகிகள் தேர்வு

குன்னூர்,ஜன.30: குன்னூர் மார்க்கெட் சங்க நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த நிலையில் ஆண்டிற்கு ஒருமுறை சங்கத்தின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் தேர்தெடுப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் குன்னூர் வியாபாரிகள் சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மழையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று குன்னூர் தனியார் அரங்கில் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவராக நாசர்,செயலாளராக ராஜ்குமார், பொருளாளராக ராதாகிருஷ்ணன், கவுரவ தலைவர்களாக ஸ்ரீனிவாசன் மற்றும் ஹைபீல்டு சேகர்ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.சங்கத்தின் துணை தலைவர்களாக சாகுல் அமீது,ஜெயக்குமார், நெளபல், ஜெயராம், சங்கர் ஆகியோரும், துணை செயலாளர்களாக ஹக்கீம்,முஸ்தபா,குமார்,கிருஷ்ணமோகன், ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

Related Stories: