முதல்வர் வருகையால் மாவட்டத்தில் 2 நாட்கள் ‘ட்ரோன்’ பறக்க தடை

மதுரை, ஜன. 30: மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.30) வருகை தருவதால் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரவீன் குமார் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானம் மூலம் மதுரைக்கு ஜன.30 (இன்று) வருகை புரிந்து சிவகங்கை மாவட்டத்திற்குச் செல்கிறார். பின்னர் மீண்டும் ஜன.31 (நாளை) மதுரை வந்து, இங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

எனவே, மதுரை விமான நிலையம், அதன் சுற்றுப் பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழிகள், தங்கும் ஜிஆர்டி ஓட்டல் மற்றும் மாவட்ட எல்லைக்குள் ஜன.30, 31 ஆகிய இரு நாட்கள் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Related Stories: