திருப்பூர்,ஜன.30: திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் வேலை தேடி வந்த பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (54) என்பவரை கைது செய்தனர். மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
