விவசாய கிணற்றில் தவறி விழுந்த கடமான் மீட்பு

தேவதானப்பட்டி, ஜன. 30: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜன்திருப்பதி. இவரது விவசாய தென்னந்தோப்பு கொடைக்கானல் மலைஅடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. நேற்று இவரது விவசாய கிணற்றில் விவசாய மின் மோட்டாரை இயக்குவதற்காக தோட்ட தொழிலாளர்கள் சென்றனர். அப்போது 6அடி கிணற்றில் தண்ணீரில் நீந்திக்கொண்டும் கிணற்றில் உள்ள திட்டில் ஒன்றரை வயதுடைய கடாமான் ஒன்று கொண்டிருந்தது.

உடனடியாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் நவீனா மேற்பார்வையில், பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் ஆனந்த், சுப்பிரமணி, நாகராஜ் உள்ளிட்டோர் கிணற்றில் இருந்த கடாமானை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் வனத்துறையினர் அந்த கடாமானை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

 

Related Stories: