உடுமலை, ஜன. 30: தமிழ்நாடு அரசின் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
அதில் 50 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஊக்க பரிசும் மற்றும் போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. முடிவில் மாணவர்கள் சாலை பாதுககாப்பு உறுதிமொழியை வாசித்தினர்.
