கோவை, ஜன.30: கோவை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன்கள் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி வழங்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மொத்தம் 49,861 விவசாயிகளுக்கு ரூ.646.63 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2 லட்சம் வரை 42,923 விவசாயிகளுக்கு ரூ.447.95 கோடியும், ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை 6,938 விவசாயிகளுக்கு 188.68 கோடியும், 3,425 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.43.76 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
