கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

மதுரை, ஜன. 30: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் ஆய்வு செய்தார். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேற வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

இதன்படி, சக்கிமங்கலம் கிராமத்தில் ரூ.3 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் பிரவீன்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விசாலாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

 

Related Stories: