கண்மாயை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வருசநாடு, ஜன. 30: கண்டமனூர் பேருந்து நிலையம் முன்பாக, நீர்நிலை ஊராட்சி நில மீட்புக்குழு சார்பில் கண்டமனூர் கிழக்கு புதுக்குளம் கண்மாயை மீட்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீர்நிலை ஊராட்சி நில மீட்புக் குழு தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்புராஜ், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், மாவட்ட விவசாய அணி நாகராஜ், தமிழக நீர் நிலைகள் பாதுகாப்பு தேனி மாவட்ட செயலாளர் அங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டமனூர் கிழக்கு புதுக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி மழைநீரைத் தேக்க வேண்டும், கண்மாயில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். கண்டமனூர் கிராம மக்களுக்குச் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

 

Related Stories: