சாத்தூர், ஜன.30: சாத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அலகு மற்றும் சாத்தூர் நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று சடையம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, சாலையில் விபத்து ஏற்படுவதை தடுப்பது மற்றும் குறைப்பது தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவர்களுக்கு விபத்துக்கான காரணங்கள், தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும், வண்டி ஓட்டும் போது செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என காணொளி மற்றும் கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அலகு பொறியாளர்கள் சசிகலா, லட்சுமிபிரியா, செல்வம், சாத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர் அபிநயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
