கோவை,ஜன.30: கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்தின. கல்லூரியின் முதல்வர் எழிலி தலைமை வகித்தார்.வேலைவாய்ப்பு அலுவலர் பிரபு ஒருங்கிணைத்தார்.
இந்த முகாமில், 26 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார்,1200 மாணவ, மாணவிகள் முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 512 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
