புகையிலை விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு

மதுரை, ஜன. 30: மதுரையில் போதை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா, எஸ்ஐ துரைமுருகன் மற்றும் ஏட்டு விக்னேஷ்குமார் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கருப்பாயூரணி வீரபாண்டி நகரில் இயங்கி வரும் ராமர் என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 144 பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவற்றை கைப்பற்றியதுடன், ராமர் மீது வழக்குப்பதிந்தனர். மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரமோகன் மற்றும் கருப்பாயூரணி எஸ்ஐ துரைமுருகன், சிறப்பு எஸ்ஐ பூமா, ஏட்டு நீலகண்டன் குழுவினர் ராமர் பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர்.

 

Related Stories: