திருப்பூர்,ஜன.30: திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில், தாராபுரம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த குமரேசன் என்ற கூலித் தொழிலாளி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியில் நாட்டாமை, ஊர் பெரியவர்கள் எனக்கூறி ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் சிலர் அச்சுறுத்தி வருகிறார்கள். மேலும், சமூக ரீதியாக சிலரை குடும்பத்துடன் ஒதுக்கியும் வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் கோயில் நிலபிரச்னை தொடர்பாக ஆறுமுகம் என்பவரது குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் இறந்ததால் அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதனால் என்னையும், எனது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
