நீடாமங்கலம் பகுதியில் 43 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் அறுவடைக்கு தயார்

நீடாமங்கலம்,ஜன.30: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் 43 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் அறுவடைக்கு தயார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கூட்டத்தில் சுமார் 33,000 ஏக்கரில் தாளடி நெற்பயிலும் பத்தாயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்கள் சித்தமல்லி, காளாச்சேரி, மேலப்பூவனூர், கடம்பூர், பரப்பனாமேடு, ராஜப்பையன் சாவடி, ஆதனூர், கோவில் வெண்ணி, ராயபுரம் மேலாளவந்தச்சேரி, கானூர், பருத்திக்கோட்டை, அனுமந்தபுரம், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் பழுத்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: