குடவாசல் அரசுபள்ளியில் 49 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வலங்கைமான் ஜன.30: குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 49 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் பிரபாகரன் மற்றும் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகன், நகர செயலாளர் சேரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் செந்தில் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாண்டியன், ஆதித்யா பாலு ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு 49 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியை தமிழ் முதுகலை ஆசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் வேதியியல் முதுகலை ஆசிரியர் சண்முகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

Related Stories: