திருவோணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து

ஒரத்தநாடு, ஜன.30: திருவோணம் அருகே நள்ளிரவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய் மகன் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமாகோட்டை பகுதியைச் சேர்ந்த சிவா வயது (29) மற்றும் இவரது தாயார் சாந்தி, இருவரும் நேற்று நள்ளிரவு திருவோணம் மூவர் ரோடு பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை சிவா ஓட்டி வந்ததாக தெரிகிறது. திருவோணம் கரம்பை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி பயங்கர சத்தத்துடன் அருகில் இருந்த பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய தாய், மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திருவோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Stories: