சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

கமுதி, ஜன.30:கமுதியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நேற்று நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை, உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் காப்பியக்கனி, சாலை ஆய்வாளர்கள் சூர்யகாந்தி கண்ணுச்சாமி, சாமுவேல் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் பிரவீன் குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் சாலை விதிகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும். மது அருந்தி வாகனங்கள் ஓட்டக்கூடாது மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பிச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணி மீண்டும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை வந்தடைந்தது.

Related Stories: