ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி,.ஜன.30: முதுகுளத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க வட்டாரத் தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயராகவன், துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். சிவணுபூவன் வரவேற்றார். இதில் 70 வயது முடிந்த அனைத்து ஓய்வுதிகளுக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு,அங்கன்வாடி, தலையாரி,வனத்துறை ஊராட்சி செயலாளர் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான மருத்துவ பரிசோதனை, சிகிச்சை சிகிச்சை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: