திருவாரூர்,ஜன.29: வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளையொட்டி வரும் 1ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மதுவிலக்கு ஆணையர் உத்தரவுபடி வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளான வரும் 1ஆம் தேதி (1.2.26) திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் எப்.எல். 1, எப்.எல் 2 மற்றும் 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
