இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டிகள்

திருவாரூர்,ஜன.29: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நாளையும் (30ந் தேதி), நாளை மறுதினமும் (31ந் தேதி) நடைபெறவுள்ளது. இதில் 100 மீட்டர், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, எறிபந்து ஆகிய போட்டிகள் நாளையும், ஓவியம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோலப்போட்டிகள்,

ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் உடல்சார், அறிவுசார் மற்றும் செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத் திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டி நாளை மறுதினமும் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.6 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவருக்கு ரூ.4 ஆயிரமும், 3ம் இடம் பெறுபவருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: