திருவையாறு வட்டார வளமையம் சார்பில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும், பாடப்பொருள் பயிற்சி முகாம்

தஞ்சாவூர், ஜன.29: திருவையாறு வட்டார வளமையம் சார்பில் ஒன்றியத்துக்குட்பட்ட 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் தொடர்பான பயிற்சி முகாம் சரஸ்வதி அம்பாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் அம்பிகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக சரவணன், கவிதா தேன்மொழி, ஜான்சிராணி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பிரதீப் செய்திருந்தார்.

 

Related Stories: