வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தஞ்சாவூர், ஜன.29: திருவையாறு சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேளாண் கல்லூரி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின் படியும் முனைவர் பாண்டியராஜன் வழிகாட்டுதலின் படியும் இந்த முகாம் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் தேவி முன்னிலையில் மாணவிகள் குழு தலைவர் பிரியதர்ஷினி, மாணவிகள் புனிதா, ரெஜோலின் மேரி, ரக்க்ஷனா, ரம்யா ,ரித்தியநந்தினி, சங்கவி, சரணியா, ஷியாமா ஜிமிரா, ஸ்ரீ தர்ஷினி உள்ளிட்டோர் வேளாண்படிப்பின் நன்மைகள் மற்றும் வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோர், வேளாண்மை உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, விதை, நெல் உற்பத்தியில் ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

 

Related Stories: