பொன்னமராவதி,ஜன.27: பொன்னமராவதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவ ட்டம் பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் கிரிதரன் தலைமைவகித்தார். நகரத்தலைவர் பழனியப்பன் முன்னிலைவகித்தார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தலைவர் மணிகண்டன் தன்னை அறிமுகம் செய்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கும், நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மணி, பாஸ்கர், சரவணபவன்மணி, ராஜேந்திரன், பொன்னுச்சாமி, முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் கணேஷ்பிரபு நிர்வாகிகள் பாலுச்சாமி, கதிரவன், ஜெயா, ஆலவயல் சுப்பையா, மற்றும் மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
